தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் நிருபர்களுக்கு பேட்டி! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 14 அக்டோபர், 2025

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் நிருபர்களுக்கு பேட்டி!

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் நிருபர்களுக்கு பேட்டி!
திருப்பத்தூர் , அக் 14 -

திருப்பத்தூர் மாவட்டம் தமிழ்நாட்டில் உள்ள வாரியங்கள் மூலம் பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் பயன் பெற்றுள்ளனர்  கட்டுமான தொழிலாளர் கள் நல வாரியம் தலைவர் பேச்சு தொழி லாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை நலவாரிய அரசு நலத்திட்ட செயல் பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் திருப்பத் தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்  மாவட்ட கலெக்டர் சிவசவுந்தரவல்லி முன்னிலையில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் தலைவர் பொன்குமார் தலைமை தாங்கி நடை பெற்றது. இதைத்தொடர்ந்து 35 பேருக்கு ரூ.42 ஆயிரம் ஓய்வூதிய உதவித் தொ கை,  25 பேருக்கு ரூ.5 லட்சம் திருமண உதவித்தொகை, 1 தொழிலாளியின் வாரிசுதாரருக்கு ரூ.2.5 லட்சம் இயற்கை மரண உதவித்தொகை, 1 தொழிலாளி யின் வாரிசுதாரருக்கு ரூ.55 ஆயிரம் இயற்கை மரண உதவித்தொகை, ஒருவருக்கு ரூ.50 ஆயிரம் மருத்துவ படிப்பு உதவித்தொகை, ஒருவருக்கு ரூ.2.5 லட்சம் சாலை விபத்து மரண உதவித்தொ கை, 21 பேருக்கு ரூ.21 லட்சம் வீடு கட்டு வதற்கான நிதியுதவியும், திறன் மேம் பாட்டு பயிற்சி பெற்ற 22 பேருக்கு சான்றிதழ்களையும் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் தலைவர் பொன்குமார், மாவட்ட கலெக்டர் சிவசவுந் தரவல்லி வழங்கினார். அப்போது செய்தி யாளர்கள் சந்திப்பில் பேசிய  தற்போது 89 ஆயிரம் தொழிலாளர்கள் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்து உள்ளனர். இதில் சிறப்பு என்ன வென்றால் 88 ஆயிரம்தொழிலாளர்களும் பணப்பயன் பெற்றுள்ளார்கள். நான் பொறுப்பேற்ற பிறகு எல்லா உதவித் தொகையும் இரண்டு மடங்காக உயர்த் தப்பட்டுள்ளது. தற்போது இதையும் தாண்டி மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள் ளது‌.தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டா லின் பதவியேற்ற பிறகு பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளார். 
மக்கள் மீது அக்கறை கொண்ட அரசாக இருப்பதால்தான் இவ்வளவு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. குறிப்பாக காலை உணவு திட்டம் கடல் கடந்து கனடா நாடு வரை சென்றுள்ளது. 16-வது இடத் தில் இருந்த தொழில் துறை தற்பொழுது முதலிடத்தில் உள்ளது. இப்படி அனைத் துத்துறைகளும் முதன்மைத்துறைகளாக விளங்குவதற்கு பல்வேறு முன்னெடுப்பு களை மேற்கொண்டுள்ளார்கள். இந்தியா விலேயே தமிழ்நாட்டில் மட்டும் 18 வகை யான வாரியங்கள் செயல்பட்டு வருகிறது இவ்வாரியங்கள் மூலம் பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் பயன டைந்து வருகின்றனர் என கூறினார்.
கூட்டத்தில்  திருப்பத்தூர் நகரமன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன், தொழி லாளர் உதவி ஆணையர்கள் (அமலாக்கம்) ரவிஜெயராம், (சமூக பாதுகாப்பு திட்டம்) ராஜராஜன், ஜெயந்தி, கட்டுமான தொழிற்சங்க தலைவர்கள் நாகேந்திரன், பூபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad