அறிவியல், கணிதம், அறிவியல் தொழில் நுட்பம் உள்ளிட்ட தலைப்புகளில் “துளிர் வினாடி வினா போட்டி”
காட்பாடி, அக்16 -
மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் கேடையம் வழங்கி பாராட்டு!
வேலூர் மாவட்டம் காட்பாடி தமிழ்நாடு அறிவியல் இயக்க வேலூர் மாவட்ட கிளையின் சார்பில் அறிவியல், கணிதம், வானவியல், இயற்பியல், உயிரியல், வேதியியல், அறிவியல் தொழில்நுட்பம், அறிவியல் அறிஞர்கள் என்ற பல்வேறு தலைப்புகளில் வினாடி வினா போட்டி கள் வேலூர் மாவட்ட அளவில் சாய்நாத புரம் ந.கிருஷ்ணசாமி முதலியார் அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்சிக்கு மாவட்ட தலை வர் பே.அமுதா தலைமை தாங்கினார். மாவட்ட செயலா ளர் முனைவர் செ.நா. ஜனார்த்தனன், வரவேற்று பேசினார். பள்ளி தலைமை யாசிரியை பி.கவிதா போட்டிகளை துவக்கி வைத்து பேசினார். வினாடி வினா போட்டிகளை கருத்தாளர் கள் பா.ராஜேந்திரன், சுகுமார், கி.மூர்த்தி, இல.சீனிவாசன், ஆகியோர் நடத்தினர்.
மாவட்ட துணைத்தலைவர்கள் ஆர்.காயத் திரி கே.விசுவநாதன், டாக்டர்.டி.கணேசன், இணை செயலாளர்கள் எ.பாஸ்கரன், பி.ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்க ளுக்கும் பங்கேற்ற மாணவர்களுக்கும் சிறப்பு அழைப்பாளராக அறிவியல் இயக்கத்தின் முன்னாள் மாநிலத்தலை வர் எழுத்தாளர் எஸ்.மோகனா, வேலூர் மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட திட்ட அலுவலர் சாந்தி பிரியதர் சினி, வேலூர் ந.கிருஷ்ணசாமி முதலி யார் அரசு நிதியுதவி மேல்நிலைப்பள் யின் செயலாளர் த.மணிநாதன், முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் வி.வாசுதேவன், சி.மணிவண்ணன், வி.உமாசங்கர், ஆகியோர் 114 மாணவர் களக்கு பரிசுகளையும் சான்றிதழ்களை யும் கேடையமும் வழங்கினர். மேலும் மாவட்ட அளவிலான சுழற்கோப்பையை வேலூர் ந.கிருஷ்ணசாமி முதலியார் அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்யின் சார்பில் செயலாளர் த.மணிநாதன் தலைமையாசிரியை பி.கவிதா பெற்றுக்கொண்டனர்.மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் மற்றம் வேலூர் கிளை செயலாளர் முத்து சிலுப்பன் வினாடி வினா அறிக்கை சமர்பித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது.. வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர், காட்பாடி, கே.வி.குப்பம், குடியாத்தம், பேர்ணாம் பட்டு, அணைக்கட்டு, கணியம்பாடி ஆகிய ஏழு ஒன்றியங்களிலும் ஒன்றிய அளவிலான வினாடி வினா போட்டிகள் நடைபெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட 6 குழுக்கள் என 38 குழுக்களில் 114 மாணவ மாணவிகள் மற்றும் 20 வழிகாட்டி ஆசிரியர்கள் 20 அறிவியல் இயக்க நிர்வாகிகள் பங்கேற்றனர். மாவட்ட அளவில் பங்கேற்ற 38 குழுக் களுக்கு நடைபெற்ற போட்டிகளில் 6 குழுக்கள் மாநில அளவிலான போட்டி களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர் மேலும் மாவட்ட அளவில் சிறப்பாக பங்கேற்ற பள்ளி என்ற வகையில் வேலூர் என்.கிருஷ்ணசாமி முதலியார் அரசு நிதி உதவி மேல்நிலைப்பள்ளிக்கு சுழற் கேடையமும், ஒன்றிய அளவில் சிறப்பாக செயலாற்றிய காட்பாடி மற்றும் அணைக் கட்டு ஒன்றிய கிளைக்கு சுழற்கேடை யமும் வழங்கி பாராட்டப்பட்டுள்ளனர் என்றார்.
மாவட்ட அளவிலான வினாடி வினா போட்டிகளை முதுகலை ஆசிரியர்கள் என்.கலைச்செல்வன், எஸ்.சித்ரா, பட்டதாரி ஆசிரியர் ஆர்.ரம்யா, ச.இளவழகன், துரைசாமி, பிரசாந்த் ஆகியோர் செய்திருந்தனர்.முடிவில் மாவட்ட பொருளாளர் வீ.குமரன் நன்றி கூறினார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் தமிழ்வழி இளநிலை பிரி வில் - பெரியதாமல், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, உயர்நிலை பிரிவில் - வேலூர் ந.கிருஷ்ணசாமி அரசு நிதி யுதவி மேல்நிலைப்பள்ளியும், மேல் நிலைப்பிரிவில் - கே.வி.குப்பம் அரசு மேல்நலைப்பள்ளி மாணவர்களும் வெற்றி பெற்றனர் ஆங்கில வழி
இளநிலை பிரிவில்- காங்கேயநல்லூர் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி,
உயர்நிலை பிரிவில்- பொய்கை அரசு மேல்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பிரிவில் வேலூர் ந.கிருஷ்ணசாமி அரசு நிதியு தவி மேல்நிலைப்பள்ளியும், மாணவர் களும் வெற்றி பெற்றனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக