கழிவு நீர் தொட்டியில் விஷ வாயுத்தாக்கி
தொழிலாளர்கள் இருவர் பலி !
ராணிப்பேட்டை , அக் 16 -
லெதர் தொழிற்சாலையில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யத தொழிளா ளர்கள் விஷவாயு தாக்கியதில் இருவர் பலி !
ராணிப்பேட்டை மாவட்டம் வி.சி.மோட்டூர் அருகே உள்ள கே.ஏ.ரஹீத் என்ற லெதர் தொழிற்சாலையில் கழிவுநீர் தொட்டியை
சுத்தம் செய்யும் பணியின் போது விஷ வாயு தாக்கியதில் வி.சி.மோட்டூர் பகுதி யை சேர்ந்த ராமன்(வயது 47) என்ற ஊழியர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழப்பு ராமனுடன் சேர்ந்து கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த விஷாரம் பகுதியை சேர்ந்த தொழிற்சாலை உரிமையாளரான
கே.ஏ.ரைஸ் அஹமது(வயது 44), வி.சி. மோட்டூர் பகுதியை சேர்ந்த குமார்(வயது 38), ஆகிய இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டுள்ளனர்
மேலும் தகவல் அறிந்து வந்த அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ராணிப்பேட்டை மேற்கு
மாவட்ட கழக செயலாளர் எஸ்எம் சுகுமார் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கும் சிகிச் சையில் இருப்பவர்களின் குடும்பத்திற் கும் தகவலை கேட்டறிந்து ஆறுதல் கூறினார்.இந்த சம்பவம் குறித்து ராணிப் பேட்டை போலீசார் விசாரணை நடத்தி
வருகின்றனர்.
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக