வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் இந்திய குடியரசு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 14 அக்டோபர், 2025

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் இந்திய குடியரசு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

வேலூர் மாவட்டம் குடியாத்தம்  பகுதியில் இந்திய குடியரசு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
குடியாத்தம் ,அக் 14 -

குடியாத்தம் செருங்கி. அம்பேத்கர் சிலை அருகில் இந்தியாவின் இறையாண்மை யை காக்கும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மாண்புமிகு.பி.ஆர். கவாய் அவர் கள் மீது காலணியை வீசிய சாதிவெறி சனாதன சங்கி ராகேஷ் கிஷோரை கைது செய்ய வேண்டி இந்திய குடியரசு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது வேலூர் மண்டல செயலாளர் இராசி தலித் குமார் தலைமை தாங்கி னார். மாவட்ட மாணவரணி செயலாளர் சரத்குமார் வரவேற்புரை ஆற்றினார். பேராசிரியர் விஜயரங்கம் ஆசிரியர் கோடீஸ்வரன் சுரேஷ் ஓய்வு உதவி கலெக்டர் கணேசன் ஆம்பூர் நகர பொறுப்பாளர் நெடுமாறன் ஆசிரியர் பாஸ்கர் ஓய்வு தபால் துறை சுகுமார் மாவட்ட துணை தலைவர் டாக்டர் மது போன்றோர் கண்டன உரையாற்றினர்கள்
 ஆர்ப்பாட்டத்தில் ராகேஷ் கிஷோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டி கோஷங்கள் எழுப்பப் பட்டது. மற்றும் மாவட்ட துணைச் செய லாளர் சின்னப்பதாஸ் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் மணிகண்டன் பாஸ்கர் செந்தில் ஜெலேந்திரன் தமிழரசன் ஏகாதாஸ் மாவட்ட பொருளாளர் வெங்க டேசன் சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad