கே.வி.குப்பம் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் “துளிர் வினாடி வினா போட்டி” ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 14 அக்டோபர், 2025

கே.வி.குப்பம் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் “துளிர் வினாடி வினா போட்டி” !

கே.வி.குப்பம் அரசு ஆண்கள்  மேல் நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் “துளிர் வினாடி வினா போட்டி” !
கே வி குப்பம் , அக் 14 -

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தமிழ் நாடு அறிவியல் இயக்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான “துளிர் வினாடி வினா போட்டி”  நடைபெற்றது.அறிவியல் இயக்க ஒன்றிய தலைவர் எம்.ஜி.ராம கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.  முன்னதாக ஒன்றிய செயலாளர் மகாலிங்கம் வரவேற்றார்.   தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வேலூர் மாவட்ட செயலாளர் முனைவர் செ.நா. ஜனார்த் தனன், ஆகியோர் சிறப்பு விருந்தினர் களாக கலந்து கொண்டு மாணவர்களு க்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி பேசினர்.
மாவட்ட பொருளாளர் வீரா.குமரன்,
மாவட்ட துணைத்தலைவர் டாக்டர். கணேசன், மாவட்ட இணை ஒருங்கி ணைப்பாளர் சுகுமார், ஆசிரியர் ஜி.சீனி வாசன் உள்ளிட்டோர் போட்டிகளை ஒருங்கிணைத்தனர்.   வினாடி வினா போட்டியில் 2 அரசு நடுநிலைப் பள்ளிகள் 2 உயர்நிலைப்பள்ளிகள் 6 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 14 பள்ளிகளில் இருந்து 120 மாணவ, மாணவியர்கள் பங்கேற்று தங்களது அறிவுத் திறமை களை வெளிப்படுத்தினர்.போட்டிகள் தமிழ் மற்றும் ஆங்கில வழி என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டன.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad