நலம் காக்கும் ஸ்டாலின் என்ற புதிய மருத்துவ முகாம் திட்டம்! தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 5 அக்டோபர், 2025

நலம் காக்கும் ஸ்டாலின் என்ற புதிய மருத்துவ முகாம் திட்டம்! தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

நலம் காக்கும் ஸ்டாலின்  என்ற புதிய மருத்துவ முகாம் திட்டம்! தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்
திருப்பத்தூர் , அக்‌5 -

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களும் எவ்வித கட்டணமுமின்றி உயர் மருத்துவ சேவைகள் பெறும் வகையிலான "நலம் காக்கும் ஸ்டாலின்" என்ற புதிய மருத்துவ முகாம் திட்டம்! 

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி வட்டாரம், அம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் 
திருமதி க.சிவசௌந்தரவள்ளி அவர்கள் தலைமையில் திருப்பத்தூர் மாவட்ட செய லாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி MLAசிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார்கள். 
இந்நிகழ்ச்சியில் நாட்றம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.சாமுடி, நாட்றம் பள்ளி ஒன்றிய குழுத் தலைவர் வெண் மதி சிங்காரவேலன், ஊராட்சிமன்றதலை வர் எ.பி.முருகேசன், ஒன்றிய கவுன்சிலர் ஆர்.பி.முரளி மற்றும் அரசு துறை அதி காரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக முன்னோடிகள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

செய்தியாளர்.
மோ. அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad