உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நீதி மன்றத்தில் அவமதித்தவர்களை கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
திருப்பத்தூர் , அக 10 -
திருப்பத்தூர் மாவட்டம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நீதிமன்றத்தில் அவமதித்த அவரை கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அவர்களை நீதிமன்றத்தில் வைத்து அவமதித்த வழக்கறிஞர் ராக்கேஷ் கிஷோரை கைது செய்ய வேண்டும் மற்றும் விடுதலை சிறுத்தை கள் கட்சியின் நிறுவனர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவனுக்கு Z+ பிரிவு பாதுகாப்பு வழங்க கோரி தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வரும் நிலை யில்,திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி அருகே விடுதலை சிறுத்தை கட்சியின் திருப்பத்தூர் தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர்க ளான வெற்றிக்கொண்டான், ஓம் பிரகாஷ் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வேலூர் திருப்பத்தூர் மண்டல செயலா ளர் இரா.சுபாஷ் சந்திரபோஸ் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
உடன் வேலூர் பாராளுமன்ற தொகுதி துணை செயலாளர் வழக்கறிஞர் சி.முரு கேசன், மண்டல துணைச் செயலாளர், கோவேந்தன்,நகர செயலாளர் ஆனந்தன், ஒன்றிய செயலாளர்கள், சக்தி, பாஸ்கர், அண்ணாமலை, ரமேஷ்,மாவட்ட இளை ஞர்அணி அமைப்பாளர் கோகுல் அமர் நாத்,நகரஇளைஞர்அணி அமைப்பாளர் விக்கி (எ) விக்னேஷ், மற்றும் மாவட்டம் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக