விழுப்புரம் மாவட்ட காவல்துறை திருவெண்ணைநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரசூர் கூட்டு சாலையில் புதிதாக புறக்காவல் நிலையத்தை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்தார்
திருவெண்ணைநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசூர் கூட்டுச்சாலையில் புதிதாக அரசூர் புறக்காவல் நிலையம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
ப.சரவணன் திறந்து வைத்து, மரக்கன்றுகள் நட்டு வைத்தும், பொதுநாட் குறிப்பு துவங்கி வைத்தார்.
உடன் விழுப்புரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ரவீந்திரகுமார் குப்தா வெண்ணைநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர்.அழகிரி, உதவி ஆய்வாளர் பாலசிங்கம் ஆகியோர் இருந்தனர்.
அரசூர் புறக்காவல் நிலையத்தில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்.
சி.அருள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக