சாதி வாரி கணக்கெடுப்பு குறித்தும் 10.5 இட ஒதுக்கீடு வழங்க கோரியும் அறவழி போராட்டம்!
திருப்பத்தூர் , நவ 23 -
திருப்பத்தூர் மேற்கு மாவட்டம் டாக்டர் மருத்துவர் ராமதாசு அவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்தும் 10.5 இட ஒதுக்கீடு வழங்க கோரியும் வருகின்ற
12/12/25 அன்று நடைபெறும் இட ஒதுக்கீடு அறவழி போராட்டத்தில் கலந்துகொள்ள கிராமங்கள் தோறும் திண்ணைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பாட்டாளி மக்கள் கட்சியினர் இந்த. நிகழ்வினை திருப்பத்தூர் மேற்கு மாவட்ட செயலாளர் அக்னி விஜயகுமார் அவர்கள் தலைமையில் திருப்பத்தூர் மேற்கு மாவட்டத்தில் வன்னியர் தனி இட ஒதுக்கீடு சாதி வாரி கணக்கெடுப்பு கோரி12/12/25 அன்று மாவட்ட ஆட்சி யாளர் அலுவலகம் முன்பு நடப்பது குறித்த துண்டறிக்கை வழங்கி ஆதரவு திரட்டினர்.மாவட்ட செயலாளர்
விஜயகுமார், மாநில கொள்கை விளக்க அணி துணைச் செயலாளர் எடப்பாடி துரைசாமி ஆகியோருடன் கட்சியினர்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக