ரூ1.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப் பட்ட நவீன தகன எரிவாயு மேடை பரா மரிப்பு இன்றி பழுதாகி வரும் கட்டிடம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 6 நவம்பர், 2025

ரூ1.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப் பட்ட நவீன தகன எரிவாயு மேடை பரா மரிப்பு இன்றி பழுதாகி வரும் கட்டிடம்!

ரூ1.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப் பட்ட நவீன தகன எரிவாயு மேடை பரா மரிப்பு இன்றி பழுதாகி வரும் கட்டிடம்!
சமூக விரோதிகளின் கூடாரமாக நடவடிக்கை எடுக்க கோரி!

குடியாத்தம் , நவ 6 -

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியில் ரூபாய் 1.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நவீன தகன எரிவாயு மேடை பராமரிப்பு இன்றி பழுதாகி வரும் கட்டிடம் - சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவரும் மயானம்பொது சொத்துக்கள் மற்றும் பொது இடங்களை பராமரிப்பதில் கேள்விக்குறி..? இதனால் தகனும் செய்ய வருபவர்களுக்கும் உயிருக்கு உத்தரவா தம் இல்லை ஏனென்றால் காடு போன்று உள்ள இந்த இடங்களில் பல்வேறு விஷப்பாம்புகள் சுற்றி தெரிவதாக குற்றச்சாட்டு வேலூர் மாவட்டம், குடியாத் தம் தாலுகா, சுண்ணாம்புபேட்டை  பகுதியில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய தகன எரிவாயு மேடை அமைக்கபட்டு கடந்த பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த நிலையில் ஒரே நேரத்தில் இரண்டு முதல் ஐந்து நபர்கள் இறந்தவர்களின் உடலை அடக்க செய்வ தில் கால தாமதம் ஏற்பட்டு வந்த நிலை யில் தற்போது கலைஞர் நகர்புற மேம் பாட்டு திட்டத்தின் கீழ் புதியதாக கடந்த 2021 2022 ஆம் ஆண்டு  மேல்ஆலத்தூர் சாலையில்  தாழையாத்தம் பகுதியில் உள்ள சுடுகாடு மயானத்தில் புதிதாக 1.50 கோடி மதிப்பீட்டில் நவீன புதிய தகன எரிவாயு மேடை கட்டப்பட்டு இறந்தவர் களின் உடலை அடக்கம் செய்து வந்த நிலையில் தாழையாத்தம் பகுதியில் உள்ள நவீன தகன எரிவாயு மேடை  கட்டிடம் முழுவதும் பராமரிப்புகள் இன்றி செடி கொடிகள் முளைத்து புதர்மங்கி  சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதாகவும் இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய வரும் உறவினர்கள் இதுகுறித்து வேதனை தெரிவித்த நிலையில் இது சம்பந்தமாக அந்த தகன எரிவாயு நிர்வாக வாலாகத்தில் பணி புரியும் ஊழியரிடம் கேட்ட போது அவர் கடந்த சில மாதங்களாகவே இந்த பகுதிக்கு வரும்   தண்ணீர் போர்வெல்  பழுதானதால்  இந்த பகுதிக்கு தண்ணீர் கிடைக்காததால் இந்த இடத்தில் இறந்த வர்களின் உடலை தகனம் செய்வதில் சிரமம் இருப்பதால் இந்தப் பகுதிக்கு வரும் இறந்தவர்களின் உடலை வேறு பகுதியில் தகன எரிமேடை மூலம் தகனம் செய்து வருவதாக தெரிவித்தார். ரூ 1.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட தகன எரிமேடை அடிப்படை வசதிகள் மற்றும் பராமரிப்புகள் இன்றி பழுதடைந்து வரும் கட்டிடத்தையும் பராமரிக்க வேண்டும் என இறந்தவர்களின் உறவினர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.  பொது சொத்துக்கள் மற்றும் பொது இடங்களை பராமரிப்பதில் கேள்விக்குறி..? இதனால் தகனும் செய்ய வருபவர்களுக்கும் உயிருக்கு உத்தர வாதம் இல்லை ஏனென்றால் காடு போன்று உள்ள இந்த இடங்களில் பல் வேறு விஷப்பாம்புகள் சுற்றி தெரிவதாக குற்றச்சாட்டு அரசு மக்களின் வரிப்பணத் தை முறையாக பயன்படுத்தி வீணடிக்கா மல்  செயல்முறைப்படுத்த பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad