புவனகிரி, நவ. 06 -
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே மிராளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கனகசபை (48) இவர் மற்றும் இவரது மனைவி தேவி(46), இருவரும் அரசு ஊழியர்களாக வெளியூரில் தங்கியிருந்து பணி செய்து வருகின்றனர். மிராளுரில் உள்ள இவர்களது வீடு எப்போதும் பூட்டிய நிலையிலேயே இருக்கும். இந்நிலையில் இவரது வீட்டிற்கு மின் விளக்கு போடச் சென்ற ஒருவர் வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, வீட்டின் உரிமையாளர் மற்றும் காவல் துறைக்கு தகவல் அளித்தார்.
இந்நிலையில் உடனடியாக வந்த வீட்டின் உரிமையாளர் மற்றும் காவல் துறையினர் உள்ளே சென்று ஆய்வு செய்தபோது வீட்டில் இருந்த ஐந்து பவுன் தங்க நகையை மட்டும் மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது. மேலும் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தடய அறிவியல் துறையினர் தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் ஸ்கூப்பர் வர வைக்கப்பட்டு திருட்டு நடைபெற்ற வீட்டின் பகுதியில் சோதனையை மேற்கொண்டனர் . அது யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை மேலும் போலீஸார் தொடர்ந்து துருவித் துருவி விசாரணை செய்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக