இராமநாதபுரம், மாவட்ட தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சங்கம் சார்பாக மாவட்ட தலைவர் வினோத் குமார் தலைமையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பணிச்சுமையை குறைக்க வேண்டும். உரிமம் பெற்ற நில அளவையர்களை பணி அமர்த்துவதை தடுக்க வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.
நகராட்சிகளுக்கு புதியதாக உருவாக்கிய நகர சார் ஆய்வாளர் பணியிடம் வழங்க வேண்டும் உள்பட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் முனியசாமி,
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் விஜயராமலிங்கம் மற்றும் மாவட்ட பொருளாளர் வேலுச்சாமி கண்டன உரையாற்றினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக