ஜோலார்பேட்டை அருகே 1 கிலோ கஞ்சா பறிமுதல் கஞ்சா விற்பவரை கையும் காலமாக பிடித்து விசாரணை ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 4 நவம்பர், 2025

ஜோலார்பேட்டை அருகே 1 கிலோ கஞ்சா பறிமுதல் கஞ்சா விற்பவரை கையும் காலமாக பிடித்து விசாரணை !

ஜோலார்பேட்டை அருகே 1 கிலோ கஞ்சா பறிமுதல் கஞ்சா விற்பவரை கையும் காலமாக பிடித்து விசாரணை !
ஜோலார்பேட்டை , நவ 4 -

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே காவல்துறையினர் நடத்திய அதிரடி நடவடிக்கையில் ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ஜோலார்பேட்டை பாய்ச்சல் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரின் மகன் தமிழரசன் என்ற இளைஞர், விற்பனை நோக்கத்தில் கஞ்சா வாங்கி வந்து, ஜோலார்பேட்டை பார்சம்பேட்டை ரயில்வே மேம்பாலம் அருகிலுள்ள மறைவான இடத்தில் பிளாஸ்டிக் கவர்களில் பேக் செய்து கொண்டிருந்த தாக கூறப்படுகிறது.அந்த நேரத்தில், திருப்பத்தூர் டிஎஸ்பி சௌமியா தலைமையிலான தனிப்படை ரோந்து சென்றபோது, சந்தேகத்திற்கிடமாக இருந்த தமிழரசனை பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரது பையில் சோதனை செய்தபோது, விற்பனைக்காக வைத்திருந்த ஒரு கிலோ கஞ்சா கண்டு பிடிக்கப்பட்டது.அதை காவல்துறையினர் பறிமுதல் செய்து, தமிழரசனை ஜோலார் பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத் தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad