தூத்துக்குடியில் கொலை மிரட்டல் வழக்கில் 2 பேர் கைது 6 பேரை தேடி வருகின்றனர். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 25 நவம்பர், 2025

தூத்துக்குடியில் கொலை மிரட்டல் வழக்கில் 2 பேர் கைது 6 பேரை தேடி வருகின்றனர்.

தூத்துக்குடியில் கொலை மிரட்டல் வழக்கில் 2 பேர் கைது 6 பேரை தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், முள்ளக்காடு வடக்கு தெருவை சேர்ந்த கணேசன் மகன் லிங்கப்பிரதீஷ்( 32) இவர் தனியார் அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். 

இவர் கடந்த 23.11.2025 அன்று கூட்டாம்புளி அருகே லிங்கப்பிரதீஷ் ஒரு திருமண நிச்சயதார்த்த விழாவிற்கு உறவினர்களுடன் சேர்ந்து காரில் சென்று விட்டு, பொட்டல் காட்டில் உள்ள தனியார் கல்லூரி அருகே திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது எதிரில் வந்த இருசக்கர வாகனத்தில் தூத்துக்குடி பொட்டல்காடு வடக்கு தெருவை சேர்ந்த மாரிச்சாமி மகன் சென்ட்ரிங் தொழில் செய்து வரும் ஆகாஷ்(20) அதே பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் கரன்குமார் (21) இந்த இரண்டு நபர்கள் லிங்க பிரதீஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை பார்த்து தகாத வார்த்தையில் பேசி தகராறு செய்து, அரிவாளால் தாக்கியும் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரியவந்தது. 

இதைத்தொடர்ந்து அவர்கள் தாக்கியதில் காயம் ஏற்பட்டவர்கள், முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 
புகாரின் அடிப்படையில் முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் சண்முக லட்சுமி மற்றும் உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு பேரை கைது செய்தனர். மேலும் 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad