நாட்றம்பள்ளி அருகே சுமார் 2 லட்சத்து 72 ஆயிரம் இருசக்கர வாகனத்தில் இருந்து திருடிய மர்ம நபர்கள்!
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே தகரகுப்பம் பகுதியை சேர்ந்த பெருமாள் (வயது 32) பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து (04.11.2025) ரூ.2 லட்சத்து 72 ஆயிரம் பணம் எடுத்த நிலை யில் பணத்தை மஞ்சள் பையில் சுற்றி தனது இருசக்கர வாகன டேங்க் கவரில் வைத்துவிட்டு, அருகிலிருந்த கடைக்கு சென்று ஜெராக்ஸ் எடுத்து வந்த இடை வேளையில் டேங்க் கவரில் இருந்த மஞ்சள் பையும், அதிலிருந்த ரொக்க பணமும் காணாமல் போனது தெரியவந் தது.இதுகுறித்து நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் பெருமாள் புகார் அளித்து ள்ளார். போலீசார் சம்பவம் நடந்த வங்கி வளாகம் மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்து விசார ணை நடத்தி வருகின்றனர்.தகவல் அறிந்து வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் மகாலட்சுமி சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற் கொண்டார்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக