குடியாத்தத்தில் வட்டாட்சியர் அலுவலகத் தில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் !
குடியாத்தம் , நவ 5 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட் சியர் அலுவலகத்தில் இன்று காலை விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடை பெற்றது கூட்டத்திற்கு வட்டாட்சியர் கே. பழனி தலைமை தாங்கினார்
வேளாண்மை துறை உதவி இயக்குனர் உமாசங்கர் முன்னிலை வகித்தார்
தலைமையிடத்து. துணை வட்டாட்சியர் மஞ்சுநாதன் வரவேற்றார் இதில் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள் குடியாத்தம் ஒன்றியம் சேம்பள்ளி ஊராட்சியில் உள்ள உப்பரபல்லி. சாலையில் உள்ள ஆக்கிர மிப்புகளை அப்புறப்படுத்த வேண்டும் சேங்குன்றம் முதல் சூறாளூர் வரை உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் தட்டாங்குட்டை. ஏரி பாசன கால்வாயை தூர்வார வேண்டும் நெல்லூர் பேட்டை ஏரி தூர் எடுக்க வேண்டும் தெரு நாய் களை பிடித்து கருத்தடை செய்ய வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி பேசினார்கள்
அனைத்துக்கும் நடவடிக்கை மேற்கொள் ளப்படும் என்று வட்டாட்சியர் உறுதி கூறினார் இக்கூட்டத்திற்கு பல துறை அதிகாரிகள் விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக