கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் குருசடி பகுதியை சேர்ந்தவர் எலிசபெத். இவர் அதே ஊரில் வாடகைக்கு குடியிருந்து வந்த பத்மா மற்றும் அவரது கணவர் ராமநாதபிள்ளை ஆகிய இருவரும் தங்களிடம் பணம் டெபாசிட் செய்தால் அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி பணத்தை கொடுத்ததாகவும் பின்பு அந்தப் பணத்தை திருப்பி கொடுக்காமல் தலைமறைவாகிவிட்டதாக கடந்த 2005 ம் ஆண்டு புகார் அளித்துள்ளார்.
விசாரணையில் இதேபோன்று 15 பேரிடம் கொஞ்சம் கொஞ்சமாக சுமார் 32 லட்சம் பணம் மற்றும் 66 பவுன் தங்க நகைகளை இந்த தம்பதியினர் மோசடி செய்தது தெரியவந்தது.
இந்த வழக்கில் கடந்த 2006 ஆம் ஆண்டு குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு நாகர்கோவில் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.
மேலும் இவ்வழக்கின் எதிரிகளான பத்மா மற்றும் அவரது கணவர் ராமநாத பிள்ளை ஆகியோர் தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலை மறைவாக இருந்து வந்ததால் இவர்கள் மீது நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.
இந்த பிடியாணையை நிறைவேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஸ்டாலின் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார்கள்
உத்தரவின் படி மாவட்ட குற்றப்பிரிவு, ஆய்வாளர் சண்முகவடிவு தலைமையிலான போலீசார் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ராமநாதபிள்ளை (56) என்பவரை தெலுங்கானா மாநிலத்தில் வைத்து கைது செய்தனர்.
பின்பு அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட புகைப்பட கலைஞர்.தமிழன் தா.ராஜேஷ்குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக