தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம்! 30 அரசு பள்ளிகளில் அறிவியல் கணிதக் கற்றல் கற்பித்தல் செய்முறை பயிற்சி! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 2 நவம்பர், 2025

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம்! 30 அரசு பள்ளிகளில் அறிவியல் கணிதக் கற்றல் கற்பித்தல் செய்முறை பயிற்சி!

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட   செயற்குழு  கூட்டம்!  30 அரசு பள்ளிகளில் அறிவியல் கணிதக் கற்றல் கற்பித்தல் செய்முறை பயிற்சி!
வேலூர் , நவ 2 -

வேலூர் மாவட்டத்தில் 30 அரசுப் பள்ளி களில் அறிவியல் கணிதம் கற்றல் கற்பித்தல் குறித்த உரிய உபகரணங்க ளுடன் செய்முறை பயிற்சி தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வேலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் வேலூர் பெல்லியப்பா கட்டிடத்தில் நடைபெற்றது.  யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து வேலூர் மாவட்டத்தில் 30 அரசுப் பள்ளிகள் தேர் தெடுக்கப்பட்டு அறிவியல் கணிதம் கற்றல் கற்பித்தல் குறித்த உரிய உப கரணங்களுடன் செய்முறை பயிற்ச்சி அளிப்பதற்கு அறிவியல் இயக்கம் இணைந்து செயலாற்ற திட்டமிட்டுள்ளது. 
மாவட்ட செயற்குழு கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பேராசிரியர் பே.அமுதா, துணைத்தலைவர் கே.விசுவநாதன் ஆகியோர் தலைமை தாங்கினர்.  முன்னதாக மாவட்ட செயலாளர் முனை வர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்று பேசியும் மாவட்ட செயல்பாடுகளை விளக்கியும் பேசினார்.
மாவட்ட இணை செயலாளர் அ.பாஸ்கர் முன்னிலை வகித்து பேசினார்.  முன்னாள் மாநில பொருளாளர் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் கு.செந்தமிழ்செல்வன், சா.குமரன், வேலூர் கிளை செயலாளர் முத்து.சிலுப்பன், ச.இளவழகன், கி.மூர்த்தி, காட்பாடி கிளை தலைவர் ஆர்.சுதாகர், பேர்ணாம்பட்டு கிளையின் சார்பில் வி.செல்வராஜ் மாநிலஅரசின் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் த.சிலம்பரசி, குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இல.சீனிவாசன், துளிர் வினாடி வினா போட்டிகளின் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் ப.சுகுமார் ஆகியோர் விவாதத்தில் பங்கேற்று பேசினர்.
பின்னர் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. 

1.தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையுடன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், யுனிசெப் நிறுவனம் இணைந்து 6முதல் 9ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கென மாநிலம் முழுவதும் சென்னை, திருவள்ளுர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்டங்களில் தலா 30 பள்ளிகள் தேர்தெடுக்கப்பட்டு அப் பள்ளிகளில் அறிவியல் கணிதம் கற்றல் கற்பித்தல் குறித்த உரிய உபகரணங்களு டன் செய்முறை பயிற்ச்சி அளிப்பது என்ற மாநில முடிவின் படி வேலூர் மாவட்டத் தில் சிறப்பாக செயல்படுத்துவது 
2.யுனிசெப்-டிஎன்எஸ்எப் திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக மாவட்ட செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் இணை ஒருங்கிணைப்பாளராக வேலூர் பெருமுகை அரசு ஆதிதிராடர் மேல் நிலைப்பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் பி.பிரகாஷ் மாவட்ட பயிற்சி கருத்தாளராக பி.ரவீந்திரன், ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
3.மாநிலம் முழுவதும் 4முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு என துளிர் திறனறிதல் தேர்வில் பங்கேற்க விருப்பம் உள்ள மாணவர்களை நவம்பர் 5ஆம் தேதிக்குள் பதிவு செய்திட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. 
4.இம் மாதம் 30ஆம் தேதி நெய்வேலியில் நடைபெற உள்ள மாநில அளவிலான துளிர் வினாடி வினா போட்டிகளில் வேலூர் மாவட்டத்தின் சார்பில் தமிழ்வழி மற்றும் ஆங்கில வழியில் முதலிடம் பெற்ற 6குழுக்கள் பங்கேற்க செய்வது என தீர்மானிக்கப்பட்டது. 
5. வேலூர் மாவட்டத்தில் உள்ள கிளை மற்றும் ஒன்றிய மாநாடுகளை டிசம்பர் 15ஆம் தேதிக்குள்ளும் மாவட்ட அளவிலான மாநாடு டிசம்பர்-20 சனிக்கிழமையும் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. 2026 ஜனவரி மாதம் விருதுநகரில் நடைபெற உள்ள  மாநில மாநாட்டில் பங்கேற்பது.
6.மாவட்ட அளவிலான 34வது குழந்தைகள் அறிவியல் மாநாடு 2025, காட்பாடியில் இம் மாதம் 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடத்துவது.  
7.மாநில அமைப்பிற்கென சென்னை மாநகரில் புதிய கட்டிடம் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது அதற்கென வேலூர் மாவட்டத்தின் சார்பில் நிதி அளிப்பது.
8.சமம் உப கிளையின் மாநில மாநாடு வேலூரில் 2026 ஜனவரி 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. 
9.அறிவியல் இயக்கத்தின் தீவிர உறுப்பினர் சேர்க்கையினை விரைவுபடுத்தி உறுப்பினர்களை சேர்ப்பது என தீர்மானிக்கப்பட்டது.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad