தேர்தல் அறிக்கையின் படி 70 வயது நிறைவு பெற்ற ஓய்வூதியர்களுக்கு 10% உயர்த்திட கோரி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு!
ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்க மாவட்ட மாநாடு, தேர்தல் அறிக்கையின்படி 70 வயது நிறைவு பெற்ற ஓய்வூதியர்களுக்கு 10% உயர்த் திட கோரி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
வேலூர் மாவட்டம் காட்பாடி தேர்தல் அறிக்கையில் தெரிவித்ததை போல ஓய்வூதியர்கள் அனைவருக்கும் 70வயது நிறைவு பெற்றவர்களுக்கு 10 சதவிகிதம் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கிட தமிழ் நாடு அரசை கோருல் உள்ளிட்ட 7அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரி தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தின் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் 10ஆம்தேதி மாலை ஆர்ப்பாட்டம் நடத்தத தீர்மானம்
ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் வேலூர் மாவட்ட மாநாடு இன்று 15.11.2025ல் வேலூர் ஆசிரியர் இல்லத்தில் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தனன் தலை மை தாங்கினார். மாநில செயற் குழு உறுப்பினர் ஜி.பாண்டுரெங்கன் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று சிறப்பு ரையாற்றினர். மாவட்ட துணைத்தலைவர் ஜி.விநாயகம் வரவேற்று பேசினார்.எ.சிவ குமார், டி.மோகனவேலு கே.பொன்னு சாமி, எஸ்.முருகேசன், ஆகியோர் பேசினர் தமிழ்நாடு அரசு அனைத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் எம்.பன்னீர்செல்வம் வாழ்த்தி பேசினார்.
பின்வரும் நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர் மாவட்ட தலை வராக முனைவர்.செ.நா.ஜனார்த்தனன், செயலாளராக ஜி.ஆறுமுகம் மாவட்ட பொருளாளராக அ.சிவக்குமார், மாவட்ட துணைத்தலைவர்களாக ஜி.விநாயகம், ஜி.ராஜேந்திரன், எஸ்.ஜெயலட்சுமி, எம்.கோபாலகிருஷ்ணன், மாவட்ட இணைச்செயலாளராக இல.சீனிவாசன், எஸ்.சச்சுகுமாரி, எ.ஜெயதேவரெட்டி, கே.சேகர், செயற்குழு உறுப்பினர்களாக டி.மோகனவேலு,எஸ்.முருகேசன்வி.பாலச் சந்தர், எஸ்.மகாலிங்கம், எம்.பாண்டுரெங் கன், கோபால இராசேந்திரன், பெ.சுப்பி ரமணி, எஸ்.சச்சிதானந்தம், எஸ்.ஜோன் பிரேமகுமாரி, ஆகியோர் ஒரு மனதாக தேர்தெடுக்கப்பட்டனர். மேலும் வேலூர் வட்ட தலைவராக டி.எ.தனசேகர், செய லாளராக எஸ்.பாலசுப்பிரமணி, பொரு ளாளராக சு.சோமாஸ்கந்தன், காட்பாடி வட்ட தலைவராக எச்.ஆசீர்வா தம், செய லாளராக பி.ஜெகன்நாதன், பொருளாள ராக பொன்னுசாமி, குடியாத்தம் வட்ட தலைவராக எம்.ஆர்.மணி, செயலாளராக எஸ்.டி.திருநாவுக்கரசு, பொருளாளராக எம்.கோபாலகிருஷ்ணன் கே.வி.குப்பம் வட்ட அமைப்பாளராக எம்.விஜயகுமார், அணைக்கட்டு வட்ட அமைப்பாளராக எஸ்.பாலவிநாயகம் ஆகியோர் தேர்ந் தெடுக்கப்பட்டனர். இவ்வறிக்கையினை மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.பாண் ரெங்கனிடம் மாவட்ட தலைவர் செ.நா.ஜனார்த்தனன் ஒப்படைத்தார்.
பின்னர் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது
1.70 வயது நிறைவு பெற்ற ஓய்வூதியர் கைள் அனைவருக்கும் 10 சதவிகிதம் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கிட கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேர்தல் அறிக்கையில் தெரிவித்ததை போல ஓய்வு பெற்ற அனைவருக்கும் 80 வயது துவக்கத்திலேயே ஓய்வூதியத் தொகை யினை இருபது சதவிகிதம் உயர்த்தி வழங்க கோரியும் 2.பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தினை இரத்து செய்து அனைவருக் கும் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறை படுத்த வேண்டும்
3.ஓய்வூதிய தொகுப்பு (கமுடேசன்) தொகையினை பிடித்தம் செய்யும் காலத்தை 15 ஆண்டிலிருந்து 10 ஆண்டு களாக குறைத்திடுக 4.மூத்த குடிமக்கள் அரசு பேருந்துகளில் பயணம் செய்ய ஆந்திர மாநில அரசு 40 சதவிகித சலுகையில் பயணம் மேற் கொள்ள அனுமதி அளித்துள்ளது போல் தமிழ்நாடு அரசும் மூத்த குடிமக்களுக் கான பயண சலுகை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை கோரி தீர்மானிக் கப்பட்டது.5.காப்பீட்டு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை களையவும் பணம் செலுத்தாமல் சிகிச்சை பெறக் கூடிய வகையில் புதிய காப்பீட்டு திட்டத்தினை நடைமுறைப்படுத்தவும் இத்திட்டத்தினை அரசே ஏற்று நடத்திட கோரியும் தீர்மானிக் கப்பட்டது.6.காப்பீட்டு செலவினத்தொகை திரும்ப பெறும் நடைமுறைகளை எளிமை படுத்திட கோருவது 7.ஓய்வூதியர்கள் அனைவருக்கு வருமான வரி செலுத்து வதிலிருந்து விலக்களிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
8.ஏழு அம்ச கோரிக்கைகளை நிறைவேற் றிட கோரி மாநிலம் தழுவிய அளவில் மாவட்ட தலைநகரில் நவம்பர் 18ஆம் தேதி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் எதிரே மாலை 4.00 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடத்துவது எனதீர்மானிக்கப் பட்டது.முடிவில் இணை செயலாளர் எஸ்.சச்சுகுமாரி நன்றி கூறினார்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக