குடியாத்தம் பிச்சனூர் 9 வது. வார்டு தோப்பு தெரு பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் !
குடியாத்தம் நவ 5 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் டவுன்.9 வது வார்டு பகுதியில் உள்ள. திருஞான சம்பந்தர் தெரு பக்கிரி முதலி.தெரு
ஆகிய தெருக்களில் மழைக்காலங்களில் வெள்ள நீர் . வெளியேறாமல் குளம் போல் தேங்கி நின்றது இது சம்பந்தமாக
அப்பகுதி பொது மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் நகராட்சி ஆணையாளர் உள்ளாட்சி . பிரதிநிதிகளிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும். நடவடிக்கை இல்லாத காரணத்தால். அவ்வப் போது சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர்
இந்நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில்
நகராட்சி துறை மற்றும் வருவாய் துறை மேற்கண்ட இடங்களை ஆய்வு செய்து அங்கு அனுமதி இல்லாமல் கட்டப்பட்டு இருந்த ஏழு வீடுகளை கண்டெடுத்து. அவைகளை பொக்லைன் மூலம் அப்புறப் படுத்தும் நோக்கில் இன்று காலை முதல் கட்டமாக நான்கு வீடுகள்அப்புறப்படுத்தப் பட்டன இதில் வட்டாட்சியர் கே பழனி நகராட்சி ஆணையாளர் சுரேஷ் குமார்
நகர அமைப்பு அலுவலர் சீனிவாசன்
மின்சார வாரிய இளநிலை பொறியாளர் உமா பிரியா ஆகியோர் ஆக்கிரமிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர் இதில் துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக