நாசரேத் - மனிதநேய காவலருக்கு குவியும் பாராட்டுக்கள். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 3 நவம்பர், 2025

நாசரேத் - மனிதநேய காவலருக்கு குவியும் பாராட்டுக்கள்.

மனிதநேய காவலருக்கு குவியும் பாராட்டுக்கள்.

நாசரேத், நவம்பர் 02, மதியம் 12 மணிக்கு நாசரேத் சந்தி பகுதியில் காலில் புண்ணுடன் அழுகிய நிலையில் இருந்த பெண் ஒருவர் இருந்து வந்தார்.

அப்போது அவ்வழியே ரோந்து சென்ற நாசரேத் காவல் நிலைய தலைமைக் காவலர் வேல்பாண்டியன் அதனை கண்டார். 

உடனடியாக 108 மருத்துவ சேவை ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, நாசரேத் நல்ல சமாரிடன் மனநல ஆதரவு இல்லம்  நிர்வாக குழுவினர் மற்றும் தலைமை காவலர் இணைந்து, அந்த பெண்மணியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தலைமை காவலரின் இந்த செயலுக்கு அப்பகுதி மக்கள் தங்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad