கள்ளப்பிரான் கோவில் ஊஞ்சல் திருவிழா. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 3 நவம்பர், 2025

கள்ளப்பிரான் கோவில் ஊஞ்சல் திருவிழா.

கள்ளப்பிரான் கோவில் ஊஞ்சல் திருவிழா.

ஸ்ரீவைகுண்டம் நவ.3. நவதிருப்பதிகளில் முதல் திருப்பதியான ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் ஊஞ்சல் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் 5 நாட்கள் நடைபெறும். 

கடந்த மூன்று தினங்களாக நடந்து வருகிறது. ஊஞ்சல் திருவிழா முன்னிட்டு நேற்று காலை 7 மணிக்கு விஸ்வரூபம் 8.30 மணிக்கு திருமஞ்சனம். 10 மணிக்கு நித்தியல் கோஷ்டி நடந்தது. 

மாலை 6 மணிக்கு சாயரட்சை. 6.30 மணிக்கு உற்சவர் கள்ளப்பிரான் ஸ்வாமி ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார். 

பின்னர் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் அத்யாபகர்கள் சீனிவாசன். வைகுண்டராமன் சீனிவாச நாத்தம். ஸ்ரீகிருஷ்ணன் ஆகியோர் சேவித் தனுர். சாத்துமுறை நடந்தது. பக்தர்களுக்கு தீர்த்தம். சடாரி. பிரசாதம் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் ரமேஷ். வாசு. நாராயணன். ராமாநுஜன். சீனு. ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி. சீனிவாசன். தேவராஜன். நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன் ஆய்வாளர் நிஷாந்தினி. அறங்காவலர் குழு தலைவர் அருணா கொம்பையா உறுப்பினர்கள் சண்முகசுந்தரம் மாரியம்மாள். பேக்கிரி முருகன். முத்துகிருஷ்ணன். பாலகிருஷ்ணன். ஊஞ்சல் உபயதாரர் ஏரல் இசக்கிமுத்து ஆசாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad