ஆண்பாவம் பொல்லாதது பட குழு நெல்லையில் பேட்டி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 3 நவம்பர், 2025

ஆண்பாவம் பொல்லாதது பட குழு நெல்லையில் பேட்டி.

ஆண்பாவம் பொல்லாதது பட குழு நெல்லையில் பேட்டி.

இயக்குனர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோ, மாளவிகா, விக்னேஷ் காந்த் போன்றோர் நடிப்பில் வெளிவந்துள்ள ஆண் பாவம் பொல்லாதது திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருகிறது.

இந்த நிலையில் படத்தின் குழு நெல்லையில் உள்ள திரைப்படம் ஓடும் பாம்பே திரையரங்கத்திற்கு வருகை தந்தது.அவர்களுக்கு மேளதாளம் முழங்க பட்டாசு வெடித்து வரவேற்பளிக்கப்பட்டது. தொடர்ந்து பாம்பே சினிமாஸ் முத்துக்குமார் அனைவருக்கும் சால்வை அணிவித்து கௌரவித்தார்.

தொடர்ந்து திரைப்படம் குறித்து ரசிகர்களை சந்தித்த குழுவினர் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.தொடர்ந்து திரைப்படத்தின் இயக்குனர் கலையரசன்,நடிகர்கள் ரியோ,விக்னேஷ்காந்த் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது பேசிய அவர்கள் திரைப்படம் வெளியாகி நல்லமுறையில் ஓடிவருகிறது.

பெரும்பாலான காட்சிகள் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக அமைந்துள்ளது மகிழ்ச்சளிக்கிறது.ஆண்களின் வலியை ஆண்பாவம் பொல்லாதது படத்தில் காட்டியுள்ளோம். ஆண்கள் ஒவ்வொருவரும் வெளிப்படுத்தும் புலம்பலை இந்த திரைப்படத்தில் காட்டப்பட்டுள்ளது ஆண்கள் பார்ப்பதற்கு வெள்ளை உடை அணிந்து பாலிசாக தெரிவார்கள் ஆனால் அவர்களது வலி அனைத்தும் பின்னால் தெரியும் அதை இந்த படம் காட்சிப்படுத்தியுள்ளது 

ஆண்களின் வழியை யாரும் பேசாமல் இருந்த நிலையில் நாங்கள் பேசி இருக்கிறோம் பெண்களுக்கும் இந்த திரைப்படம் மிகவும் பிடிக்கும். தோழர் என்பது மிகப்பெரிய சரியான வார்த்தை. அதனை யாரும் தப்பாக பயன்படுத்திவிட கூடாது என்பதுதான் எங்களது நோக்கம். இந்த படத்தில் தோழர் என்ற வார்த்தையை கிண்டலுக்குரியதாக நாங்கள் பயன்படுத்தவில்லை அனைவரும் தோழர் என்ற வார்த்தைக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

பெண்ணியம் பேசும் படத்தில் ஆண் வில்லனாக காட்சிப்படுத்தப்பட்டிருப்பார் அதேபோல் இது ஆண்களுக்காக எடுக்கப்பட்ட படம் அதில் பெண் வில்லனாக காட்டப்பட்டுள்ளது. அடிப்படையில் பெண்கள் அனைவரும் தவறானவர்கள் என நாங்கள் எதுவும் சித்தரிக்கவில்லை. 

படத்தை முழுவதும் பார்த்தால் இது பெண்களுக்கு எதிரான படம் இல்லை என்பது அனைவருக்கும் புரியும் என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad