தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 15வது பொதுக்குழு கூட்டம் தூத்துக்குடியிலுள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு, மாநில பொருளாளர் காஞ்சி இப்ராஹிம் தலைமை வகித்து ''நிர்வாகிகளே உங்களைத்தான்'' என்ற தலைப்பில் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தேவையான அறிவுரை வழங்கினார்.
மாநில செயலாளர் அல்அமீன், மாவட்ட பேச்சாளர் யாசர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் ரஷீத்காமில் பொருளாதார ஆண்டறிக்கையும், மாவட்ட செயலாளர் இம்ரான் ஜமாஅத்தின் செயல்பாட்டு ஆண்டறிக்கையையும் சமர்ப்பித்தனர்.
மாவட்ட துணைத்தலைவர் இமாம்பரீத் கடந்தாண்டில் சிறப்பாக செயல்பட்ட கிளைகளுக்கும், நிர்வாகிகளுக்கும், ரத்த தான முகாம் நடத்திய கிளைகள் மற்றும் அவசர இரத்த தானம் வழங்கிய கிளைகளுக்கும், மதுரை மாநாட்டு பணிகளை சிறப்பாக செய்த கிளைகளுக்கும் பரிசு வழங்கினார்.
மாவட்ட துணை செயலாளர் அஸாருதீன் பொதுக்குழுவின் முக்கிய நிகழ்வாக சமுதாய மற்றும் மார்க்கப்பணிகளில் தொடர்ந்து கவனம் செலுத்தும் முகமாக ''சத்தியத்தில் சங்கமிப்போம்'' என்ற மூன்றுமாத செயல்திட்டத்தினை அறிமுகப்படுத்தி அதுதொடர்பான விளக்கம் அளித்தார்.
மாநில செயலாளர் அல்அமீன் ''கட்டுப்படுவோம் வெற்றிபெறுவோம்'' என்ற தலைப்பில் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
கூட்டத்தில், இஸ்லாமிய இளைஞர்கள் பலர் தாங்கள் விரும்பிய படிப்பை படிக்க முடியாமலும், படித்து முடித்த பிறகு இங்கு வேலை கிடைக்காமலும் அரபுநாடுகளை நோக்கி படையெடுக்கக்கூடிய அவலநிலை இன்னும் தொடர்கிறது.
இஸ்லாமிய இளைஞர்களின் இந்த ஜீவாதார பிரச்சினையை போக்கும் வகையிலும் தங்களது தாய்நாட்டில் கண்ணியத்தோடு வாழும் வகையிலும் இஸ்லாமியர்களின் இடஒதுக்கீட்டை முதற்கட்டமாக குறைந்தபட்சம் 5சதவீதமாக அதிகரித்து வழங்குவதற்கு தமிழக அரசு ஆவண செய்யவேண்டும்.
தூத்துக்குடி மாநகரில் தெருநாய்கள் தொல்லை அதிகமான அளவில் உள்ளது. இதனால், மாணவ, மாணவியர்கள், அப்பாவி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தெருநாய்களின் பெருக்கத்தையும், தொல்லையையும் கட்டுப்படுத்திட மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்திடவேண்டும்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு வழங்கியுள்ள இடைக்கால உத்தரவில் வக்பு வாரிய திருத்த சட்டத்தை நிறுத்தி வைக்க முகாந்திரம் இல்லை என கூறப்பட்டுள்ளது, மிக முக்கியமாக இஸ்லாமியர் அல்லாதவர்கள் வக்பு வாரியத்தில் உறுப்பினர் ஆகலாம் எனும் பிரிவை அனுமதிப்பதன் மூலம் சிறுபான்மையினரின் வழிபாட்டு உரிமை கேள்வி குறியாகிறது எனவே உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பை பரிசீலிக்கவேண்டும்.
மேலும் இறுதித் தீர்ப்பில் வக்பு வாரிய திருத்த சட்டத்தை முழுமையாக ரத்து செய்யவேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில், மாவட்ட செயலாளர் சித்தீக், மாணவரணி செயலாளர் ரஸீன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிக்கந்தர் மீரான், தூத்துக்குடி கிளை நிர்வாகிகள் சேக்முஹம்மது, அல்இப்ராஹிம் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். மாவட்ட துணை செயலாளர் தௌலத்துல்லாஹ் நன்றி கூறினார்.
செய்தியாளர் - பார்த்திபண் - ஶ்ரீவைகுண்டம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக