ஸ்ரீவைகுண்டம் நவ 5. தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள நவதிருப்பதிகளில் மூன்றாவது திருப்புளிங்குடி. தினசரி பூஜைகள் செய்வதில் ஏதேனும் விடுதல்கள் தவறுதல் ஏற்பட்டால் அதற்கு பரிகாரமாக பவித்ரோத்ஸவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி திருப்புளிங்குடி கோவிலில் கடந்த மூன்று நாட்களாக பவித்ரோத்ஸவம் நடைபெற்றது.
இறுதி நாளான நேற்று காலை 7 மணிக்கு விஸ்வரூபம். திருமஞ்சனம். பின்னர் ஹோமம் செய்யப்பட்டது. 11 மணிக்கு பூர்ணாகுதி. 11.30 மணிக்கு தீபாராதனை. அத்யாபகர்கள் சீனிவாசன். பட்சி ராஜன். மதுரகவி.பொரியதிருவடி. ராமானுஜம். ஆகியோர் நாலாயிரம் திவ்வியப் பிரபந்தம் சேவித்தனர்.
மாலை 5 மணிக்கு சாயரட்சை. பின்னர் பவித்ரா மாலைகள் அர்ச்சகர்கள் ரமேஷ். சௌந்திரராஜன். கோபாலகிருஷ்ணன் ஆகியோர் படிகளையப் பட்டு சாத்துமுறை நடந்தது. பக்தர்களுக்கு தீர்த்தம் சடாரி பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன். ஆய்வாளர் நிஷாந்தினி. அறங்காவலர் குழுத் தலைவர் அருணா தேவி கொம்பையா உறுப்பினர்கள் மாரியம்மாள் சண்முகசுந்தரம் பேக்கிரி முருகன். முத்துகிருஷ்ணன். பாலகிருஷ்ணன். ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக