ஏரல் தாலுகா பண்டாரவிளை அரசு கால் நடை மருத்துவ மனை உள்ளது அதனை சுற்றி பல கிராமங்கள் உள்ளடக்கியுள்ளது.
அங்கே மக்களின் வாழ்வாதாரம் விவசாயம் மற்றும் ஆடு மாடு கோழி வளர்ப்பையே நம்பி உள்ளனர் மழைக்காலம் என்பதால் கால்நடைகள் உடல் நலக்குறைவால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன காலை ஒன்பது மணி முதல் 12 மணி வரை மட்டுமே கால்நடை மருத்துவமனை இயங்கும் இதில் எப்போது சென்றாலும் மருத்துவர் இல்லை என்றே சொல்கின்றனர் மருத்துவர் நான்கு ஊர்களில் கால்நடை மருத்துவர் கால்நடை மருத்துவமனை பார்ப்பதால் தான் மருத்துவர் இல்லை என்று சொல்கின்றனர்.
இதனால் அப்பகுதி மக்கள் கால்நடைகளை தூத்துக்குடி திருநெல்வேலி போன்ற பகுதிக்கு கொண்டு செல்ல நேரிடுகிறது இதனால் பண்டாரவிளை அரசு கால்நடை மருத்துவமனையில் விரைவில் மருத்துவர் குறித்த நேரத்தில் இருக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுகின்றனர்
தமிழக குரல் செய்திகளுக்காக ஏரல் செய்தியாளர் சேதுபதி ராஜா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக