வன விலங்குகளை வேட்டையாட பதுக்கி வைத்திருந்த இரண்டு நாட்டு துப்பாக்கி கள் பறிமுதல் ஒருவர் கைது ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 26 நவம்பர், 2025

வன விலங்குகளை வேட்டையாட பதுக்கி வைத்திருந்த இரண்டு நாட்டு துப்பாக்கி கள் பறிமுதல் ஒருவர் கைது !

 வன விலங்குகளை வேட்டையாட பதுக்கி வைத்திருந்த இரண்டு நாட்டு துப்பாக்கி கள் பறிமுதல் ஒருவர் கைது !
குடியாத்தம் , நவ 26 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உப்பரப்பள்ளி கிராமம் வனப்பகுதி ஒட்டிய கோவிந்தசாமி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது இந்த விவசாய நிலத்தில் செம்மரம் சந்தன மரம் தேக்குமரம் தென்னை உள்ளிட்ட மரங்களை வைத்து விவசாயம் செய்து வருகிறார்.இந்த நிலையில் கோவிந்தசாமி தற்போது குடும்பத்துடன் ஓசூர் பகுதியில் வசித்து வருவதால் இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கொட்டாரமடுகு பகுதியை சேர்ந்த கோபி என்பவர் குடும்பத்துடன் காவலாளியாக இருந்து விவசாய நிலத் தை பராமரித்து வருகிறார். மேலும் விவசாய நிலத்தில் காவலாளியாக உள்ள கோபி என்பவர் அவ்வப்போது வனப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடி வருவதாகவும் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக வந்த புகாரை அடுத்து  தமிழ்நாடு வன மற்றும் வன உயிரின குற்றக்கட்டுப்பாட்டு பிரிவு அலுவலகத்திற்கு வந்த ரகசிய தகவலின் பெயரில்  வேலூர் மற்றும் குடியாத்தம் வனத்துறையை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள்  உப்பரப்பள்ளி வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலத்திற்கு வந்து சோதனை செய்த போது அங்கு 2 நாட்டு துப்பாக்கி குண்டுகளுடன் லோடு செய்து உள்ளதும் மேலும்  துப்பாக்கி மருந்து மயில்இறகு, முயல் வலை, டார்ச்லைட் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை பறிமுதல் செய்து விவசாய காவலாளி கோபியை கைது செய்து குடியாத்தம் கிராமிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு நாட்டு துப்பாக்கில் இருந்த குண்டை  அடர்ந்த வனப்பகுதியில் வனத்துறையி னர் வெடித்து நாட்டு துப்பாக்கியை போலீ சாரிடம் ஒப்படைத்தனர் வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலத்தில் வன விலங்கு களை வேட்டையாட பதுக்கி வைத்திருந்த 2 நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் செய்யப் பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad