ராணிப்பேட்டை மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஒருங்கி ணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம்!
ராணிப்பேட்டை நவ-02
இராணிப்பேட்டை மாவட்டம் முத்துகடை தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஒருங்கி ணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் மேற்கு மாவட்ட செயலாளர் நல்லூர் சண்முகம் தலைமையில் நடைபெற்றது கிழக்கு மாவட்ட செயலாளர் லோகநாதன் வரவேற்புரையாற்றினார் மேலும் ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்பு செயலாளர் கிருஷ்ணன், கிழக்கு மாவட்ட தலைவர் செல்வகுமார், மேற்கு மாவட்ட தலைவர் அஜய் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில அமைப்பு தலைவர் காளிதாஸ், மாநில இளைஞர் சங்க செயலாளர் பரந்தூர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு பாட்டாளி மக்கள் கட்சியை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்றும் மேலும் வருகின்ற 16 ஆம் தேதி சோளிங்கர் சட்டமன்ற தொகுதி நெமிலிக்கு வருகை தர உள்ள நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கு மிக சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் கேட்டுக்கொண்டார் மேலும் மாவட்ட செயலாளர் சண்முகம் பேசுகையில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற அனைவரும் அயராத உழைத்து வெற்றி வாகை சுட வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர் இறுதியில் ராணிப்பேட்டை நகர செயலாளர் ஜானகிராமன் நன்றியுரை கூறினார்
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக