வாணியம்பாடி அருகே நண்பர்களுடன் பாலாற்றில் குளிக்க சென்ற மாணவன் நீரில் மூழ்கி பலி !
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பெத்த கல்லுபள்ளி தலைவர் வட்டம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகன் திலீப்(வயது 17). இவர் தொழில்நுட்ப கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை கல்லூரி விடுமுறை என்பதால் நண்பர் களுடன் சேர்ந்து கொலையாஞ்சி பாலாற்றில் குளிக்க சென்று உள்ளார்.
அப்போது ஆழமான பகுதிக்கு சென்று நீச்சல் தெரியாததால் திலீப் நீரில் முழுகியுள்ளார். இதனை பார்த்த உடன் சென்ற நண்பர்கள் சத்தம் போட்டுள்ளனர் இவர்களின் கூக்குரல் கேட்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின் பேரில் அம்பலூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நீரில் மாயமான திலீப்பை சுமார் 1 மணி நேரம் தீவிரமாக தேடி சுடலமாக மீட்டனர். இதனை தொடர்ந்து அம்பலூர் போலீசார் பிரேதத்தை கைபற்றி பிரேத பரிசோத னைக்காக வாணியம்பாடி அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசார ணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாலாற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற ஐ.டி.ஐ மாணவன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக