தூத்துக்குடியில் காதல் தோல்வியால் இளைஞர் தற்கொலை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 8 நவம்பர், 2025

தூத்துக்குடியில் காதல் தோல்வியால் இளைஞர் தற்கொலை.

தூத்துக்குடியில் காதல் தோல்வியால் இளைஞர் தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் வடக்கு காலங்கரை சேர்ந்த செந்தூர்கனி மகன் மோகன்ராம் வயது( 19) இவர் தூத்துக்குடி தனியார் கல்லூரியில் இரண்டாவது ஆண்டாக பயின்று வருகிறார். 

இதனைத்தொடர்ந்து காதல் தோல்வியின் காரணமாக (29. 10. 2025) அன்று களைக்கொல்லி மருந்து குடித்ததாக தெரியவந்தது. இதை கண்டறிந்த அப்பகுதி மக்கள் இளைஞரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

இதன் தொடர்பாக உயர் சிகிச்சைக்காக மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றனர். அங்கு ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.இந்த நிலையில்(07. 10.2025) அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

இதை கண்டறிந்த புதுக்கோட்டை காவல் நிலையம் ஆய்வாளர் முருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் கணேஷ் தூத்துக்குடி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad