தூத்துக்குடி - கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 5 நபர்களுக்கு தலா ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூபாய் 15,000/- அபராதம் விதித்து தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 8 நவம்பர், 2025

தூத்துக்குடி - கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 5 நபர்களுக்கு தலா ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூபாய் 15,000/- அபராதம் விதித்து தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு.

தூத்துக்குடி, புதுக்கோட்டை பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 5 நபர்களுக்கு தலா ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூபாய் 15,000/- அபராதம் விதித்து தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு - இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 23 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2015ம் ஆண்டு புதுக்கோட்டை அருகே குலையன்கரிசல் பகுதியில் வைத்து அதே பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் மகன் பொன்நிமேஷ் (35/2015) என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் குலையன்கரிசல் பகுதியைச் சேர்ந்தவர்களான மாடசாமி மகன் பொன்சேகர் (70/2025), பொன்சேகர் மகன் சுபாகர் (32/2025), முருகேசன் மகன்களான ரமேஷ் (30/2025), சுரேஷ் (28/2025) மற்றும் முருகன் மகன் மாடசாமி (31/2025) ஆகிய 5 நபர்களை புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி தாண்டவம் இன்று (08.11.2025) மேற்படி நபர்களான பொன்சேகர், சுபாகர், ரமேஷ், சுரேஷ் மற்றும் மாடசாமி ஆகிய 5 நபர்களுக்கும் தலா ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூபாய் 15,000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் முருகவேல் மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் ஆனந்த் கேப்ரியல் ராஜ் விசாரணைக்கு உதவியாக இருந்த முதல் நிலை காவலர் விஜயா ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad