ஸ்ரீவைகுண்டம் நவ. 8. நவதிருப்பதிகளில் 4 வது திருப்பதியான தொலைவில்லிமங்கலம் அரவிந்த லோச்சனர் கோவிலில் ஐப்பசி பிரம்மோற்சவம் கடந்த 4 ந்தேதி துவங்கியது.
இன்று 5-ந்திருவிழாவை முன்னிட்டு கருடசேவை நடந்தது. காலை 7 மணிக்கு விஸ்வரூபம். 8 மணிக்கு திருமஞ்சனம். நித்தியல் கோஷ்டி. 9.30 மணிக்கு உற்சவர் செந்தாமரை கண்ணன் ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் வீதி உலா நடந்தது . பின்னர் 10 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம். நாலாயிர திவ்வியப் பிரபந்தம் அத்யாபகர்கள் கீழத்திருமாளிகை ராமானுஜம் ஸ்வாமி. அரையர் சாரங்கன் ஸ்வாமி தலைமையில் சேவித்தனர்.
சாத்துமுறை கோஷ்டி தீர்த்தம் .சடாரி.பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது . மாலை 4.30 மணிக்கு சாயரட்சை. 4.40 மணிக்கு உற்சவர் செந்தாமரை கண்ணன் மற்றும் தேவர் பிரான் கருட மண்டபம் எழுந்தருளினார்.
5. 40 மணிக்கு கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார். உடன் மாடவீதி சுற்றி வந்தது.
இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் சுந்தர்ராஜன். ரகு ஸ்தலத்தார்கள் சந்தானம். வாசு. அறங்காவலர் குழுத் தலைவர் ராமானுஜம் என்ற கணேசன் உறுப்பினர்கள் கிரிதரன். ராமலட்சுமி. காளிமுத்து. செந்தில். நிர்வாக அதிகாரி சதீஷ். ஆய்வாளர் நம்பி.
கள்ளப்பிரான் கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி. உபயதாரர் திருமலை. டி.வி.எஸ் கள ஆய்வாளர் பாபு.கள ஆலோசகர் விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தினசரி மாலை 5 மணிக்கு யானை வாகனம். சந்திரபிரபை வாகனம். குதிரை வாகனம் ஆகிய வாகனங்களில் வீதியுலா வருகிறார். நவம்பர் 13 ந்தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக