அரியலூர் நகராட்சியில் 18 வார்டுகளிலும் அசுத்தம் – சுகாதார ஆய்வாளர் தர்மராஜ் பணிமுறைகள் குறித்து மக்கள் அதிருப்தி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 8 நவம்பர், 2025

அரியலூர் நகராட்சியில் 18 வார்டுகளிலும் அசுத்தம் – சுகாதார ஆய்வாளர் தர்மராஜ் பணிமுறைகள் குறித்து மக்கள் அதிருப்தி.


அரியலூர், நவ. 08 -

சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவலின்படி, அரியலூர் நகராட்சியில் மொத்தம் 18 வார்டுகள், 64 தெருக்கள் உள்ளன. இவை அனைத்திற்கும் சுகாதார ஆய்வாளர் தர்மராஜ் அவர்கள் சுத்தம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், மக்கள் மற்றும் ஊழியர்களிடமிருந்து கிடைக்கும் குற்றச்சாட்டுகளின்படி,

“தினமும் காலை 5 மணிக்கே தூய்மைப் பணியாளர்களை வார்டு வாரியாக பணிக்கு அனுப்பி, பின்னர் 18 வார்டுகளையும் சுற்றி ஆய்வு செய்யவேண்டும் என்ற பணி முறையே நடைமுறையில் இல்லை,” என தெரிவிக்கப்படுகிறது.
தெரிவுகளின்படி, சுகாதார ஆய்வாளர் தர்மராஜ் அவர்கள் அலுவலகத்திற்கு காலை 10 மணிக்கே வருகிறார்11 மணிக்குள் வெளியே சென்றுமாலை 4 மணிக்கே மீண்டும் அலுவலகம் வந்து 5 மணிக்குள் வெளியேறுவதாகவும் கூறப்படுகிறது. மேலும், நகராட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக கொசு மருந்து தெளிப்பு வேலைகள் நடைபெறவில்லைப்ளீச்சிங் பவுடர் போடாமல் சுண்ணாம்புப் பவுடர் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இத்தகைய சேவைகள் வழங்கப்படாமலிருந்தும் பில் போட்டு பணம் எடுக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

நகராட்சி அலுவலகத்துக்குச் பிறப்பு, இறப்பு சான்றிதழுக்காக வரும் பொதுமக்கள், அலுவலர் இல்லாத காரணத்தால் பல மணி நேரம் காத்திருந்து சிரமப்படுவதாகவும் தெரிகிறது. மேலும், அலுவலகத்தில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்கள், “500 ரூபாய் கொடு, 1000 ரூபாய் கொடு” என்று தர்மராஜ் அதிகாரி பணம் கேட்கிறார் என்று கூறி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து அரியலூர் நகராட்சி ஆணையர் அசோக்குமார் அவர்களிடம் கேட்கப்பட்டபோது,

“அவர் தனிப்பட்ட அதிகாரத்தில் உள்ளார், நான் எதுவும் செய்ய முடியாது. ஆடிட்டுக்கு நான் காசு கொடுத்து பார்த்துக்கொள்கிறேன்,” என்று கூறியதாக மூலங்கள் தெரிவிக்கின்றன.

 

இதனால், அரியலூர் நகராட்சி நிர்வாக ஆணையர் மதுசூதன் ரெட்டி அவர்களுக்கு எழுத்து மூலமாக புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்றும் தெரிகிறது.


மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது —

“எப்போதுதான் விடியல் பிறக்கும் இந்த அரியலூர் நகராட்சி சுகாதாரத் துறைக்கு?”


© தமிழககுரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு: 📞 9843 663 662 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad