குடியாத்தத்தில் அனைத்திந்திய அண்ணா திமுகவின் சார்பில்.பூத். முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம்
குடிாத்தம் , செப் 8 -
வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தம் நகர அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நகர கழக செயலாளர் ஜே கே என் பழனி அவர் களின் தலைமையில் இன்று சனிக் கிழமை மாலை 5.00 மணி அளவில் குடியாத்தம் ஆர் எஸ் ரோடு ஸ்ரீ வைஷ்ணவி மஹாலில் பூத் (BLA -2) முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக வேலூர் புறநகர் மாவட்ட கழகச் செயலா ளர் த வேலழகன், அவர்களும், வேலூர் புறநகர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி என் ராமச்சந்திரன் அவர்களும் கலந்து கொண்டு அவர்களுக்கான ஆலோசனை களை வழங்கினர். நிகழ்ச்சியில் மாவட்ட கழக துணைச் செயலாளர் அமுதா சிவப் பிரகாசம் மாவட்ட சார்பணி செயலாளர் கள் மாலிபட்டு பாபு, ரமேஷ்குமார், அன்வர் பாஷா வழக்கறிஞர் கோவிந்த சாமி, கழக நிர்வாகிகள் ரவிச்சந்திரன் பூங்கொடி மூர்த்தி, சலீம் அட்சயா வினோத்குமார், நகர மன்ற உறுப்பினர் கள் லாவண்யா குமரன் ரேவதி மோகன் சிட்டி பாபு உட்பட வார்டு கழகச் செயலா ளர்கள் சார்பணி நிர்வாகிகள் குடியாத்தம் நகரத்தில் உள்ள 81பூத் (BLA 2) நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக