இன்று (8 -11 -25) கிணத்துக்கடவு தாலுகா வடசித்தூர் கிராமம் பகுதியில் நீண்ட நாட்களாக குடிநீர் வராத காரணத்தால் வடசித்தூர் பொதுமக்கள் மேட்டுக்கடை பகுதியில் காலி குடங்களுடன் போராட்டம் நடத்தினர். உடனே தகவல் அறிந்து நெகமம் காவல்நிலைய ஆய்வாளர் விரைவில் வந்து போராட்ட விவரங்களை அறிந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் அதில் சில நாட்களாக வடசித்தூர் பகுதியில் தண்ணீர் வரவில்லை என்று பொதுமக்கள் கூறியதை அடுத்து நெகமம் காவல் ஆய்வாளர் வடசித்தூர் பஞ்சாயத்து அலுவலக அதிகாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர் .
அவர்கள் மோட்டார் பழுது காரணத்தினால் தண்ணீர் வருவதற்கு தாமதம் ஆகிவிட்டது என்றும் மோட்டார் பழுது நீக்கிய பிறகு கண்டிப்பாக மிக விரைவில் குடிநீர் விடுவதாக கூறிய பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
செய்திகள்;
எம். பரமசிவம்.கோவை மாவட்ட செய்தியாளர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக