பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் கைப்பேசி டார்ச் லைட் அடித்து ஆர்ப்பாட்டம்!
ராணிப்பேட்டை , நவ
ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலை யம் அருகில் தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவி உதவியாளர் சங்கம் சார்பில் கைபேசி டார்ச் லைட் அடித்து தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் ஆர்ப்பாட்டம். நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாரதி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் விமலா அனைவரையும் வரவேற்றார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ரேவதி கலந்து கொண்டு கோரிக்கை விளக்க உரையாற்றினார்.அமுதவல்லி சிறப்புரை ஆற்றினார்கள்.முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவி வாழ்த்துரை வழங்கினார்.இந்தக் இந்த கோரிக்கைகள் குறித்து பேசியதாவது,
தமிழ்நாட்டை ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத குழந்தைகளை உருவாக்குவ தில் முதன்மை இடத்தில் இருக்கும் அங்கன்வாடி ஊழியர்கள் தனது பாதி வாழ்நாளில் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் குழந்தைகளை ஆரோக்கி யமாக உருவாக்குவதில் செலவிடுகின்ற னர் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களின் நிலைமை கவலை குழந்தைகளை நிலைக்கு தள்ளப்பட்டுள் ளனர் .அங்கன்வாடி ஊழியர்கள் துறை சார்ந்த பணி மட்டுமல்லாமல் மற்ற துறைகளில் பணிகளை செய்ய நிர்பந்தி க்கப்படுகின்றனர் இது தொடர் கதையாக உள்ளது. எனவே அங்கன்வாடி ஊழியர் களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 2021 தேர்தல் வாக்குறுதியின் படி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக மாற்ற வேண்டும் என்றும் மேலும் பல கோரிக்கைகள் வளர்ச்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.முடிவில் மாவட்ட பொருளா ளர் சரளா நன்றி தெரிவித்தார் இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் ஆர் ஜே சுரேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக