ஊழல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு குறித்து மின்னணு வாகனம் தெடக்கம!
மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவல்லி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
திருப்பத்தூர் , நவ 2 -
திருப்பத்தூர் மாவட்டம் ஊழல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு குறித்து மின்னணு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவல்லி கொடி அசைத்து துவக்கி வைத்தார். ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் அக்டோபர் 27 முதல் வரும் நவம்பர் இரண்டாம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊழல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு குறித்து மின்னணு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி கொடியசைத்து துவக்கி வைத்தார். ஊழல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாசகங்கள் பொருந்திய பதாகைகளை கையில் ஏந்தியவாறு "பேருந்தில் மட்டும் அல்ல அலுவலகங் களிலும் கைகளை நீட்டாதே" போன்ற வாசகங்களை முழங்கியவாறு 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்ற இந்த விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் துவங்கி திருப்பத்தூர் நகர பேருந்து நிலையம் , நீதிமன்றம் , திருப்பத்தூர் தலைமை அரசு மருத்துவமனை வழியாக சென்று அரசு உதவி பெறும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சென்று நிறைவடைந்தது. ஊழல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு சித்திரங்கள் ஒளிபரப்பியவாறு மின்னணு வாகனம் பேரணியில் பங்கேற்றது. இந்நிகழ்ச்சியில் துறை சார்ந்த அரசு அலுவலர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புண்ணிய கோட்டி, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக