கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், குமரி மாவட்டத்தின் தலைநகராக நாகர்கோவில் திகழ்கிறது. கன்னியாகுமரிக்கு வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் நாகர்கோவில் வழியாகவே செல்கிறார்கள்
அதாவது கன்னியாகுமரி சாலை,
செட்டிகுளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சாலை, கோட்டார் வைத்தியநாதபுரம் சவேரியார் கோவில் சந்திப்பு, பீச் ரோடு ,பாலமோர் சாலை, கேப் சாலை மற்றும் கணேசபுரம், பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை,என நாகர்கோவில் அனைத்து சாலைகளுமே குண்டும்-குழியுமாக இருக்கிறது
அதிலும் குறிப்பாக கோட்டார் கன்னியாகுமரி சாலை இருந்து செட்டிகுளம் வரை செல்லும் சாலை மிகவும் மோசமான நிலைக்கு சென்றுவிட்டது.
அங்கு ஜல்லி, தார்கலவை அனைத்தும் பெயர்ந்து ரோடு இருப்பதே தெரியாத அளவுக்கு உள்ளது. மேலும் இது சாலையா? அல்லது மரண குழிகளா? பொதுமக்கள் வேதனை
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக