கன்னியாகுமரி மாவட்ட எர்த் முவர்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தில் உள்ள உறுப்பினர்களின் சுமார் 30 எண்ணிக்கையிலான JCB , பொக்லைன் இயந்திரங்களை மாத வாடகைக்காக வடக்கன் குளம், திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த எஸ். இசக்கி முத்து த/பெ சுப்பிரமணி மற்றும் கார்த்திகேயன் என்பவருக்கு 3 மாதத்திற்கு முன்பு கொடுக்கப்பட்டிருந்தது.
ஓரிரு மாதங்களாக வாடகை தந்து கொண்டு இருந்து வந்தார். தற்போது இயந்திரங்கள் எங்கே நிற்கிறது என்றே பாதிக்கப்பட்ட உரிமையாளருக்கு தெரியவில்லை.
இந்த சமயத்தில் நேற்று இரவு ரெயிலில் அடிபட்டு இசக்கி முத்து என்பவர் காலமானார். எனவே எங்கள் இயந்திரங்களை மீட்டுத் தருமாறு எங்கள் சங்கத்தின் சார்பில் செயலாளர். பிரியதர்சன், பொருளாளர் ஷாஜி கிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் அசோகன்,
நாகர்கோவில் இணைத் தலைவர் செல்வ மன்மதன் மற்றும் பாதிக்கப்பட்ட உறுப்பினர்கள் ராஜன், செல்வராஜ், ராமச்சந்திரன், சிரில் குமார், தனேஷ், அஜின், கண்ணன், தீபா, சுவிட்சன், ஆன்றனி, செலின் மேரி ஆகியோர் இணைந்து காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக