கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நாகர்கோவில் தக்கலை, கன்னியாகுமரி பகுதிகளில் பைக் திருட்டு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தது . இப்புகார்கள் சம்பந்தமாக உடனடியாக குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்கள்.
உத்தரவின் படி நாகர்கோவில் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்.
சிவ சங்கரன் அவர்களின் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் திரு. அஜய் ராஜா ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை விசாரணையில் இந்தத் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டது திருநெல்வேலி மாவட்டம் கோட்டையடி பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் மாரியப்பன்(22) மற்றும் நான்கு 18 வயதிற்கு உட்பட்ட இளஞ்சிரார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ஏழு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த இருசக்கர வாகனங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காவல் நிலைய வழக்குகளில் சம்பந்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக