தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வு ஊதியர் சங்கம் வட்டக்கிளை சார்பாக மாபெரும் அரை நாள் தர்ணா போராட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 11 நவம்பர், 2025

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வு ஊதியர் சங்கம் வட்டக்கிளை சார்பாக மாபெரும் அரை நாள் தர்ணா போராட்டம்!

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வு ஊதியர் சங்கம் வட்டக்கிளை சார்பாக மாபெரும் அரை நாள் தர்ணா போராட்டம்!
குடியாத்தம் , நவ 11 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்சங்கம் குடியாத்தம் வட்ட.கிளை சார்பாக மா பெரும் 1/2 நாள் தர்ணா போராட்டம் இன்று காலை புதிய பஸ் நிலையம் அருகில் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு 
வட்டத் தலைவர் எஸ். சரவணன் தலை மை தாங்கினார்.இதில் செயலாளர் எஸ். கோடீஸ்வரன்,பொருளாளர் பி தனபால்,
இணை செயலாளர்கள் எம்.ஆர்.மணி, எஸ்.டி. திருநாவுக்கரசு,கே. கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
தர்ணா போராட்டத்தை துவக்கி வைத்து
மாநிலத் துணைத் தலைவர் பி. கிருஷ்ண மூர்த்தி மாவட்ட துணை தலைவர் ஏ. ராஜேந்திரன் கே.ரகு ஆகியோர்சிறப்புரை ஆற்றினார்கள் இதில் கீழ்கண்ட கோரிக் கைகள் குறித்து கோஷம் எழுப்பப்பட்டது.
தமிழக அரசு அளித்த உறுதி மொழியான 70 வயது கடந்த அனைத்து ஓய்வூதியர்க ளுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம்அளிக்கப் பட வேண்டும் கமுடேசன் பிடித்தம் காலத் தை 15 ஆண்டுகளுக்கு பதிலாக 11 ஆண்டுகளாக குறைத்திட வேண்டும்
குறைந்தபட்சம் ஓய்வுதியயம் ரூபாய் 7850 சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்கள் வனத்துறை ஊராட்சித் துறை ஊழியர் களுக்கு வழங்க வேண்டும் மருத்துவ காப்பீடு திட்ட குறைபாடுகளை நீக்கி அனைத்து ஓய்வூதியர்களும் பயன் அடையும் அளவில் திட்டத்தை செழுமை படுத்த வேண்டும் . புதிய ஓய்வூதியம் ரத்து செய்து பழைய ஓய்வூதியம் வழங் கப்பட வேண்டும்.மேலும் ஓய்வூதியர் களை வஞ்சிக்கும் வேலிடேசன் சட்டத்தினை திரும்ப பெற வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.இந்நிகழ்வில் ஏராளமான பெண்கள் உட்பட 200 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் எஸ்.டி திருநாவுக்கரசு நன்றி கூறினார்.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad