திருப்பத்தூரில் அருள்மிகு ஶ்ரீ செல்வ முத்து மாரியம்மன் ஆலய மகா கும்பாபி ஷேக விழா !
திருப்பத்தூர் , நவ 23 -
திருப்பத்தூர் மாவட்டம்திருப்பத்தூர் 2வது வார்டு அனுமந்த உபாசகர் பேட்டையில் அமைந்துள்ள புதிதாக ஆலயம் புனரமை க்கப்பட்ட அருள்மிகு ஸ்ரீ செல்வ முத்து மாரியம்மன் ஆலயத்தில் ஜுர்ணோத் தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபி ஷேக விழா நடைபெற்றது.விழாவில் சாமிக்கு கொடியேற்றுதல் தொடங்கி காப்புகட்டுதல் முளைப்பாரி கொண்டு வருதல் ஆலயத்தில் உள்ள பல்வேறு பிரகார தெய்வங்களுக்கு பூஜைகள் நிறைவேற்றி யாகசாலை பிரவேசம் தொடங்கி மகாபூர்ணாஹீதி தொடங்கி கலச புறப்பாடு செய்து ஆலயத்தில் மேல் உள்ள அம்மனுக்கு புனித நீர் ஊற்றப் பட்டு ஆலயத்தில் உள்ள செல்வ மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு தீப ஆராத னைகள் காண்பிக்கப்பட்டது.ஆலயத்தில் சுற்றி இருந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.உடன் இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியின் போது ஆலய நிர்வாகிகள். வெங்கடாசலம். மோகன். மணி. செல்வம். சண்முகம். சொக்கலிங்கம். ரகு.திருப்பதி. அச்சா முருகன். இரண்டாவது வார்டு நகர மன்ற உறுப்பினர் குட்டி என்கின்ற சீனிவாசன். சதீஷ் பாபு வழக்கறிஞர். பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள். ஊர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமான கலந்து கொண்டனர் பின்பு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக