திருப்பத்தூர் மாவட்டம் வாணியம் பாடி யில் கள்ளக்காதலை கண்டித்த கள்ளக் காதலியின் கணவருக்கு கத்திக்குத்து..!
வாணியம்பாடி , நவ13 -
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மில்லத் நகர் பகுதியை சேர்ந்தவர் அன்புராஜ் மனைவி ஜீவா இரு குழந்தை களுடன் வசித்து வருகிறார். ஜீவாவுக்கு அதே தெருவை சேர்ந்தவர் பிரேம்குமார் என்ற வாலிபருடன் கள்ள உறவு இருந்த தாக கூறப்படுகிறது. இதனை அன்புராஜ் சில மாதங்களுக்கு முன் தட்டிக் கேட்டுள் ளார், ஆத்திரமடைந்த பிரேம்குமார் (12.11.2025) நள்ளிரவு அன்புராஜ் வீட்டில் புகுந்து, கத்தியால் தலை உள்ளிட்ட பல இடங்களில் வெட்டியுள்ளார்.கடுமையாக காயமடைந்த அன்புராஜ் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச் சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது
தகவல் அறிந்து வந்த கிராமிய போலீசார் தப்பியோடிய பிரேம்குமாரை தேடி வருகின்றனர்.இந்த சம்பவம் வாணியம் பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக