பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலி*யல் துன்புறுத்தலை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 7 நவம்பர், 2025

பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலி*யல் துன்புறுத்தலை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலி*யல் வன்கொடுமை மற்றும் பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலி*யல் துன்புறுத்தலை கண்டித்தும் தூத்துக்குடி மாவட்ட மகிளா காங்கிரஸ் 
 சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். 

இதைக் குறித்து தூத்துக்குடியில் - 07.11.25 மாலை 5 மணி அளவில் விவிடி சிக்னல் அருகே நடைபெற்றது .

இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு
தலைமை, உமா மகேஸ்வரி முன்னிலை, தனலட்சுமி இசக்கியம்மாள் லட்சுமி ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர் 
கண்டன உரை க. பெருமாள் சாமி
(தமிழ்நாடு ஐஎன்டியூசி மாநில பொதுச் செயலாளர், தமிழ்நாடு மாநில பொதுக்குழு உறுப்பினர் ) ஆற்றினார்கள் 
 மேலும் , AICWC மகிளா காங்கிரஸ் சார்ந்த இசக்கியம்மாள் தனலட்சுமி உமா மகேஸ்வரி ஆகியோர் மற்றும் முன்னாள் எஸ்சி எஸ்டி பிரிவு மாவட்ட தலைவர் ராஜாராம் கண்டன உரையாற்றினார்கள் மற்றும் மாவட்ட பொது செயலாளர் இக்னேஷியஸ் நன்றி உரையாற்றினார் .

 கண்டன ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ் விவசாய அணி பேரையா SMT சுந்தர்ராஜ், சுரேஷ்குமார், வழக்கறிஞர் செல்வம், சேகர், முருகேசன், ஐஎன்டியூசி சார்ந்த மனோகரன், சிவலிங்கம், முத்து ரமேஷ், சாரதி,பாலன், கிரிதரன்,ஜெய்சிங், தியாகு,துரை திவாகர்,விஜய், ரகு
மற்றும் சுமார் 150 க்கு மேற்பட்ட மகிளா காங்கிரசை சேர்ந்த தொண்டர்கள் மற்றும் தேசியத் தோழர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad