கன்னியாகுமரி மாவட்டத்தில் கன மழை பெய்து வருகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின்படி தொடர் மழை, வெள்ளம் மற்றும் புயல் ஆகியவற்றால் பாதிப்பு நேரிட்டால் ஆபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவதற்கு கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய இடங்களில் மாநில பேரிடர் மீட்பு படை வெள்ளம் மீட்பு பயிற்சி பெற்ற மாவட்ட காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
அந்த குழுவினரையும் வெள்ள மீட்பு உபகரணங்களையும் மாவட்ட ஆயுதப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் மீட்பு குழுவினர் 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வண்ணம் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு பொதுமக்களின் உயிரையும் உடைமைகளையும் காப்பதில் முக்கியத்துவம் கொடுத்து செயலாற்ற வேண்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெள்ள மீட்பு குழுவினருக்கு அறிவுறுத்தியுள்ளார்
பொதுமக்கள் அவசர உதவிக்கு காவல் கட்டுப்பாட்டு அறைய என் 100 அல்லது 7010363173 எண்ணிற்கோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்கள்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக