தூத்துக்குடி சிவந்தாகுளம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் கார்த்திக் (39) என்பவர் நேற்று (09.11.2025) இரவு முத்தையாபுரம் உப்பாத்து ஓடை காட்டுப்பகுதி அருகே இருசக்கர வாகனத்தில் நின்றபோது அங்கு வந்த 2 பேர் கார்த்திக்கிடம் பேச்சுக்கொடுத்து அவரிடம் இருந்து வெள்ளி கைச்செயின் மற்றும் வெள்ளி மோதிரம் மற்றும் செல்போன் பறித்துச் சென்று தப்பியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து கார்த்திக் இன்று (10.11.2025) அளித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் முத்தையாபுரம் முள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் மகன் வசந்தகுமார் (19) மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த இளஞ்சிறார் ஒருவர் ஆகிய இருவரும் மேற்படி கார்த்திக்கிடம் தகராறு செய்து அவர் அணிந்திருந்த வெள்ளி பொருட்களை பறித்துச் சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து உடனடியாக முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் மேற்படி இளஞ்சிறாரை கையகப்படுத்தியும், வசந்தகுமாரை கைது செய்தும் அவர்களிடமிருந்து வெள்ளி கைச்செயின் மற்றும் வெள்ளி மோதிரம் மற்றும் செல்போன் ஒன்று கைப்பற்றினர்.
மேலும் இதுகுறித்து முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக