மாணவ மாணவிகளுக்கான மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்த அமைச்சர், ஆட்சியர், எம் எல் ஏ பங்கேற்பு!! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 21 நவம்பர், 2025

மாணவ மாணவிகளுக்கான மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்த அமைச்சர், ஆட்சியர், எம் எல் ஏ பங்கேற்பு!!

 மாணவ மாணவிகளுக்கான மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்த அமைச்சர், ஆட்சியர், எம் எல் ஏ பங்கேற்பு!!
ராணிப்பேட்டை , நல் 21

ராணிப்பேட்டை மாவட்டம் பள்ளி மாணவ மாணவிகளுக்கான மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்த கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி மாவட்ட ஆட்சியர் முனைவர்.ஜெ.யு. சந்திரகலா ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல். ஈஸ்வரப்பன், கலந்து கொண்டு விளை யாட்டு போட்டியில் துவக்கி வைத்தார்
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ராணிப்பேட்டை காரை கூட்ரோடு பகுதியிலுள்ள சிறுவர் களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை சார்பில் சிறுவர் சிறுமியருக்கான பாதுகாப்பு இல்லங்களில் பயிலும் மாணவ மாணவி களுக்கான மண்டல அளவிலான 2 நாள் விளையாட்டுப் போட்டியில்விளையாட்டு ஜோதியை ஏற்றி வைத்தார்கள். 
உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர். ஜெ.யு. சந்திரகலா,ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப் பன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரஞ்சித பிரியா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஞானசேகரன். நகரமன்ற உறுப்பினர்கள் வினோத், மற்றும் பலர் உள்ளனர்.

 மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad