பூதப்பாண்டி பேரூராட்சிக்குட்பட்ட துவரங்காடு பிரதான சாலையில் மதுபான விற்பனையகம் அமைந்துள்ளது.
இதனையொட்டியே தாமரை மலர்கள் பூத்திருக்கும் நன்னீர் தடாகமும் உள்ளது.இந்த மதுபானகடையின் பின்புற சுவர் முதல் அருகிலுள்ள நீர்நிலையின் கரை,மற்றும் சாலையோரத்தை மதுபிரியர்கள் திறந்த வெளி பார் ஆக வரிசையாக அமர்ந்து குடித்து வருகிறார்கள்.இந்த பகுதி முழுவதும் இவர்கள் குடித்துவிட்டு வீசிச் செல்லும் "தடை செய்யப்பட்ட ஒருமுறை உபயோகிக்கும் டம்ளர் தடைசெய்யப்பட்ட நெகிழி கோப்பை கழிவுகள்,தண்ணீர் பாட்டில்கள்,மூடிகள்)
என மலைபோல் குவிந்து கிடக்கிறது.மழையின்போது இவை அடித்துச்செல்லப்பட்டு சாலையோரத்தும், குளத்திலும் பிளாஸ்டிக் கப்புகள் மிதக்கின்றன.
இப்பகுதியில் நிலத்தடிநீரும்,நிலமும் சுற்றுச்சூழலையும் பாதுகாத்து உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அபராதம் விதித்து, மேலதிக நடவடிக்கை எடுத்து நிலத்தையும் நீர்நிலையையும் பாதுகாக்க வேண்டும் எனவும். மேலும் அப்பகுதிகளில் சில சமூக விரோதிகளின் செயல்களால் பொதுமக்கள் நடமாட அச்சமாக இருப்பதாகவும்.
சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வேதனையுடன் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக