தானத்தில் சிறந்த தானம் கண்தானம் 1000 க்கும் மேற் பட்டோரின் கண்கள் தானம் சமூக சேவகர் கோபிநாத்துக்கு கலெக்டர் பாராட்டு!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோல்டன் கேலக்ஸி ரோட்டரி சங்கத்தின் சாசனத் தலைவரும், ரோட்டரி மாவட்டம் 32 31 முன்னாள் மாவட்ட செயலாளருமான எம்.கோபிநாத்தின் சமூகச் சேவைகளைப் பாராட்டி விருதை வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி வழங்கினார்.
2015-ஆம் ஆண்டு முதல் இன்று வரை, ஆயிரத்துக்கும் மேற்பட்ட இறந்தவர்க ளின் கண்களை தானம் பெற்று தந்தமைக்காகவும், 450 கும் மேற்பட்ட உடல்களை பல்வேறு அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு உடல் தானம் செய்ய முனைப்புடன் செயல்பட்டதற்கா கவும், 600-க்கும் மேற்பட்ட உடல்களைத் தனது சொந்த செலவில் அடக்கம் செய்த தற்காகவும், இறந்த 3 பேரின் உடல் உறுப்புகளைத் தானம் பெற்று தந்ததற் காகவும் இந்த விருது வழங்கப்பட்டது.
சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் 69-ஆவது நினைவுத் தினத்தையொட்டி, பேரணாம்பட்டு அறம் செய்யும் கரங்கள் அறக்கட்டளை, தமிழ்நாடு ஒடுக்கப்பட் டோர் வாழ்வுரிமை இயக்கம் ஆகியன இணைந்து குடியாத்தம் நெல்லூர்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 30.11.2025-அன்று நடத்திய நிகழ்ச்சியில், கோபி நாத்துக்கு விருது வழங்கப்படது.
முன்னதாக நடைபெற்ற ரத்த தான முகா மில் 105 பேர் ரத்த தானம் செய்தனர். இவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ், பரிசுகளை கலெக்டர் சுப்புலட்சுமி வழங்கினார். விழாவில் எம்எல்ஏ அமலு விஜயன், முன்னாள் எம்எல்ஏ ஜி.லதா, நகர்மன்றத் தலைவர் எஸ்.செளந்தர ராஜன், கோட்டாட்சியர் சுபலட்சுமி, தாசில்தார் கே.பழனி, அத்தி மருத்து வமனை தலைமை மருத்துவர் ஏ.கென் னடி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் உத்தரகுமாரி, அரசு மருத்துவமனை ஆலோசனைக் குழு உறுப்பினர் துரை செல்வம், அறம் செய்யும் கரங்கள் அறக்கட்டளை தலைவர் சுப்ரவிநாயகம், செயலாளர் பி.சத்தியராஜ், பி.சந்திர சேகர், டாக்டர் அனிதா இரவு பள்ளி ஒருங்கிணைப்பாளர் சி.திருமலை, அரசு மருத்துவமனை லேப் டெக்னிஷியன் ஆர்.மோகன்பிரபு உட்பட பலர் பங்கேற்றனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக