தாராபுரத்தில் மறைந்த முன்னாள் திமுக பொதுச் செயலாளரும், பேராசிரியருமான அன்பழகனின் 103-ஆவது பிறந்தநாள் விழா, திமுகவினர் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 19 டிசம்பர், 2025

தாராபுரத்தில் மறைந்த முன்னாள் திமுக பொதுச் செயலாளரும், பேராசிரியருமான அன்பழகனின் 103-ஆவது பிறந்தநாள் விழா, திமுகவினர் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.



தாராபுரம், திருப்பூர் தெற்கு மாவட்ட திமுகவினர் சார்பில், தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகத்தில் உள்ள திமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருப்பூர் நான்காம் மண்டல தலைவரும், திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான இல. பத்மநாபன் தலைமையில், நகரச் செயலாளர் முருகானந்தம் முன்னிலையில், திமுக நிர்வாகிகள் மறைந்த பேராசிரியர் அன்பழகனின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி விழாவை கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில், நகர, வார்டு, கிளைக் கழகம், பேரூர் கழகம் மற்றும் மாநில, மாவட்ட அளவிலான திமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad